ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா ரூ. 1.25 கோடி நிதி திரட்டி உதவி செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிகை 1,071லிருந்து 1,251 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நிவாரணப்பணிக்காக யார் வேண்டுமானாலும் நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்தார். அதேபோல் மாநில அரசுகளும் நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. அதற்காக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல்வாதிகள், குடிமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த நிதிகளை வழங்கி வருகின்றனர்.

image

ஊரடங்கு உத்தரவால் கூலித்தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், பழங்குடியினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வேலைக்கு போனால்தான் சோறு என்ற நிலையில் பெரும்பாலோனோர் பசியும் பட்டினியுமாக வாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பணம் திரட்ட டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முன்வந்தார். அந்த வகையில் நிதி திரட்டி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவியும் செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த வாரம் ஒரு குழுவாகச் செயல்பட்டு உதவி தேவைப்படும் மக்களுக்கு ஆதரவாக இருந்தோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு வழங்கினோம். ஒரு வாரத்தில் ரூ. 1.25 கோடி திரட்டினோம். அந்தத் தொகை 1 லட்சம் பேருக்கு உதவியாக இருக்கும். இந்தச் சேவை தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.