“ஊரடங்கு `பிக் பாஸ்’ எப்படியிருக்கு?”

“இது `பிக் பாஸ்’ அளவுக்கு இல்லை. ஷோவுல16 பேருடைய முகத்தைத் தவிர யாரையும் பார்க்க முடியாது. அதுலேயும் சிலர் நமக்கு முன்னப் பின்ன அறிமுகம் இல்லாதவங்களா இருப்பாங்க. அவங்களைப் புரிஞ்சிக்கிறது ஒரு அனுபவமா இருக்கும். ஆனா, இதைவிட பெரிய அனுபவம் வீட்டுக்குள்ள இருக்கிறவங்களைப் புரிஞ்சிக்கிறது. இதுதான் பெரிய டாஸ்க்னு நினைக்கிறேன். வீட்டுல இருக்கிற உறவுளோட மனசுவிட்டுப் பேசலாம், ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம். நம்மகிட்ட தொலைத்தொடர்பு இருக்கு. அவசர உதவிக்கு மருத்துவமனை போக முடியும். ஏதாவது, பொருள் வாங்கணும்னாகூட பக்கத்துல மளிகைக் கடைக்குப் போக முடியுது. முக்கியமா, பக்கத்து வீட்டுல இருக்குறவங்கிட்ட ஜன்னல் வழியாகூட பேசிக்கலாம். மனிதர்கள் இதுல எடுத்துக்க வேண்டிய விஷயம் என்னனா, எப்பவும் குடும்பம், வேலைன்னு கனவுகளோட ஓடிக்கிட்டு இருந்திருப்போம். நம்மகிட்ட நம்ம பேசுனதைவிட அடுத்தவங்ககிட்ட பேசுனதான் அதிகம். நாள் முழுக்க அடுத்தவங்ககிட்ட ஒப்பிட்டுப் பார்த்தே ஓடிடுச்சு. மத்தவங்க மாதிரி ஆடை, கார் இல்லன்னு ஓடிக்கிட்டிருக்கோம். கடந்த 25 ஆண்டுகளாக இப்படிதான் நடக்குது. நான் சின்ன பையனா இருந்தப்ப ஸ்கூல் முடிச்சிட்டு வீட்டுக்கு வர்றப்ப கை, கால் கழுவிட்டு வீட்டுக்குள்ள வரலன்னா கொன்னுடுவாங்க. அதுவும் நம்ம ஸ்கூல் பையை நம்மதான் கொண்டுபோய் மாட்டணும். ஆனா, இப்போ இருக்கிற சூழல்ல இதெல்லாம் நடக்குறதில்லை. பணம், புகழ், வெற்றினு ஓடிக்கிட்டிருக்கோம். மின்சாரம் மாதிரி சுத்திக்கிட்டிருக்க நேரத்துல இந்த ஊரடங்கு நல்லதுதான். இதை நான் பாசிட்டிவாதான் பார்க்கிறேன்.”

“நேரத்தை எந்த மாதிரி செலவு பண்றீங்க?”

கோவையில் ஊரடங்கு

“சென்னை வீட்டுலதான் இருக்கேன். முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கு. நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். இதுமட்டுமல்லாம மாநகராட்சி கமிஷன் வரைக்கும் பேசிக்கிட்டு இருக்கேன். வாலன்ட்டியரா வேலைபார்க்க ரெடியா இருக்கேன். எப்ப வேணாலும் கூப்பிடுவாங்க. என்கூட 100 இளைஞர்கள் ரெடியா இருக்காங்க. ஏன்னா, மருத்துவ சேவையை என்னால செய்ய முடியாது. ஆனா, தூய்மைப் பணியாளர்கள்கூட தெருக்களைக் கூட்ட ரெடியா இருக்கேன். கஜா, வர்தா புயலின்போது களத்துல நின்னு வேலைபார்த்த அனுபவம் இருக்கு. மக்களுக்கு ஏதாவது ஒண்ணுனு இருக்குறப்போ வீட்டுக்குள்ள இருக்க பிடிக்கல. ஆனா, நம்மனால மத்தவங்களுக்குத் தொந்தரவு ஆகக் கூடாதுனு அமைதியா இருக்கிற தனிமைதான் என்னைக் கொல்லுது. வீட்டுல நானும் உதவியாளர் மட்டும்தான் இருக்கோம். மத்தவங்க எல்லாரையும் ஊருக்கு அனுப்பிட்டேன். இந்தச் சூழல்ல அரசாங்கத்தோட ஆர்டர் இல்லாம எதுவும் பண்ண முடியாது. நான் உணவு தர்றேன், வந்து வாங்கிட்டுப் போங்கனு சொல்ல முடியல. பண்ற ஏதோ ஒரு விஷயத்தால யாருக்காவது தொற்று வர்றதுக்கு நான் காரணமா இருக்கக் கூடாதுனு நினைக்கிறேன்.”

“வீட்டுல இருக்கிற மக்கள் எந்த மாதிரியான விஷயங்கள்ல பொழுது போக்கலாம்?”

சினேகன்

“கணவன் மனைவி ரெண்டு பேருமே வேலைக்கு அவசர ஓட்டத்துல நாள்கள் ஓடியிருக்கும். அதனால இருக்கிற வீட்டுக்குள்ள எந்தப் பொருள் தேவை, தேவையில்லனு தெரிஞ்சிக்காம இருந்திருப்பாங்க. நம்ம வீட்டுல எது தேவை, எது தேவை இல்லைன்னு பார்க்கலாம். என்னோட வீட்டுல கரன்ட் இல்லேன்னாகூட எது எங்க இருக்குனு எனக்குத் தெரியும். இதுதவிர, குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லலாம். இதுவரைக்கும் பேசாத நபர்கள் எல்லாருக்கும் போன் பண்ணி ஹலோ சொல்லலாம்.”

“தமிழக அரசின் நடவடிக்கை எப்படியிருக்குனு நினைக்குறீங்க?”

“அவங்ககிட்ட இருக்கிறதை வெச்சு என்ன பண்ண முடியுமோ யோசிச்சு அதைப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்ப ரீதியாகவும் இன்னும் அழுத்தமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கு. உலகம் முழுக்கவும் கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கல. அதனால, நோய்த் தொற்று வராம தடுக்குறதுக்குத் தனித்திருத்தல் சரிதான். இருந்தும், கொஞ்சம் முன்கூட்டியே இதைப் பண்ணியிருக்கலாம்னு தோணுச்சு. ஏன்னா, மாசத்தோட தொடக்கத்திலே கொரோனா பயம் வந்துடுச்சு. உலக நாடுகள் சொன்னதுக்குப் பிறகும் 20 நாள்கள் கழிச்சுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கையில் எடுத்தோம். கொஞ்சம் மெத்தனமாக இருந்திருக்கோம். இருந்தும், இந்த மாதிரியான காலகட்டத்துல ஒரு அரசாங்கத்தைக் குறை சொல்றது சரிப்பட்டு வராது. மக்களும் இதுக்கு ஒத்துழைக்கணும். காலையில உழைச்சாதான் சாயங்கலாம் சாப்பாடுனு இருக்கிற மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது செய்யணும். இல்லைன்னா தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவி கேட்டு செயல்படணும். இல்லைன்னா உணவு பற்றாக்குறை தலைவிரித்தாடும். அம்மா உணவகம் திறந்திருந்தாலும் சில விஷயங்கள்லாம் இருக்கு. அதைச் சரி செய்யணும். எந்த நாட்டுலேயும் உணவோட பற்றாக்குறை வர்றப்போ விலை ஏறாது. பற்றாகுறை மட்டும் இருக்கும். ஆனா, தமிழ்நாட்டுல மட்டும் நெருக்கடி வந்திருச்சுனா விலை அதிகமாகும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்தணும். மக்களுக்காக சட்டத்தைப் பயன்படுத்த முடியல அப்புறம் எதுக்காக சட்டம் ஆளுமை, அரசு. நெருக்கடியான காலத்துலதான் இலவசமா கொடுக்கணும்.”

“கமலிடம் பேசுனீங்களா?”

“இப்போகூட பேசுனேன். அவரும் வருத்தத்தில இருக்கார். எல்லாம் சீக்கிரம் சரியாகணும். ”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.