ஊரடங்கில் காவல்துறையினர் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சென்னை பூக்கடை துணைக் கமிஷனர் ராஜேந்திரன் காவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சிலர் உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிகின்றனர். விதிகளை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியும் அனுப்பி வைத்தனர். இதில் சென்னையில் பணிமுடித்து விட்டு வந்த மருத்துவர் ஒருவரை காவல் ஆய்வாளர் ஒருவர் லத்தியால் தாக்குவது போன்ற வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை எழுப்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகு, அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள் மத்தியில் கூட தயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் சென்னை பூக்கடை துணைக்கமிஷனர் ராஜேந்திரன் நேற்று காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அவர் பேசியபோது ‘‘வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள் யாரும் கையில் லத்திக்கம்பு வைத்திருத்தல் கூடாது. பொதுமக்களை அடிக்கக் கூடாது. காவல்துறையின் நோக்கம் குற்றவியல் நடைமுறைச்சட்டமான 144 தடை உத்தரவின் விதிகளை மக்களுக்கு புரிய வைப்பதே ஆகும். அதை விட்டு பொதுமக்களை துன்புறுத்துவதோ, அவர்களை அடிப்பதோ கிடையாது. இங்கு ஒன்னும் சட்டம் ஒழுங்குக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. ஆகவே வீண் தகராறில் ஈடுபட்டு காவல்துறைக்கு தேவையில்லாத அவப்பெயரை ஏற்படுத்தாதீர்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் ஒவ்வொரு இடத்திலும் விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவைவிட ஆபத்தாகும் ஊரடங்கு உத்தரவு உயிரிழப்புகள்?: கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்.!
விதிகளை மீறி வெளியே வரும் பொதுமக்களிடம், வெளியே வருவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து விளக்குங்கள். அதேபோல அத்தியாவசியம் உள்ளவை, அத்தியாவசியம் இல்லாதவை எவை என்பதை காவல்துறையினராகிய நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். உணவு, பால், அரிசி, மளிகை, மீன், இறைச்சி, காய்கறி இவை அனைத்தும் அத்தியாவசியமானவை. மருந்துப் பொருட்கள், மளிகை மட்டுமே அத்தியாவசியம் கிடையாது.
ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பதற்கான திட்டம் தற்போது இல்லை – மத்திய அரசு
வங்கிக்கு செல்வது, செல்போன் டெக்னீசியன்கள், வங்கி, ஏடிஎம் மற்றும் இன்சூரன்ஸ், இவை அனைத்துமே அத்தியாவசியமானவைதான். அத்தியாவசிய சரக்குகள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை அனுமதிக்கலாம். வாகன சோதனையின்போது பொது அறிவைப் பயன்படுத்துங்கள். பிரச்சனைகள் தொடர்பாக அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை பெற்று கையாளுங்கள்” என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM