வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
வழக்கமாக கோடை விடுமுறை விட்டால், ஏதாவது மலைவாசதலங்களுக்கு குடும்பத்தோடு சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த முறை வால்பாறைக்கு சென்றோம். பொள்ளாச்சியில் இருந்து காரில் புறப்பட்டதில், முதலில் வரவேற்றது ஆழியாறு அணை.
3 பக்கமும் மலைகளுக்கு நடுவே பறந்து விரிந்து நிற்கும் நீர்த்தேக்கம் பார்க்கவே அருமையாக இருந்தது.
அருகேயே சுற்றுலா துறை சார்பில் சுற்றுச் சூழல் பூங்கா பராமரிக்கப்படுகிறது.
கால்வாயில் தண்ணீர் பாய்ந்து ஓடுவதை பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது. வெளியூரில் இருந்து வரும் ஏராளமானோர், இங்கு புகைப்படம் எடுத்து பொழுதை கழிக்கின்றனர்.
ஒரு மணிநேரம் ஆழியார் அணையை ரசித்த நாங்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றோம். சிறிது தூரம் சென்றால் அணையின் மறு பக்கத்தை காரில் இருந்து பார்க்கலாம். அந்த வியூ பாய்ன்ட் அருமை!
ஹார்ன்பில் வியூ பாய்ன்ட்
8 கிலோ மீட்டர் பயணித்தால் ஹார்ன்பில் வியூ பாய்ன்ட் வருகிறது. அங்கிருந்து ஆழியாறு அணையின் மொத்த அழகையும், கண்களால் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். காடு, மலைகளுக்கு நடுவே பறந்து விரிந்து காணப்படும் இந்த காட்சி, அமைதியையும், இயற்கையும் விரும்புபவர்களுக்கு அருமையான ஸ்பாட்.!
அங்கிருந்து வால்பாறை நோக்கி சென்றால், கவியருவி வரும். பாறை இடுக்குகளில் இருந்து வரும் நீரில் குளிக்கலாம். நாங்கள் சென்ற நேரத்தில் தண்ணீர் வரவில்லை.
அதனால், சற்று ஏமாற்றமே. அதன்பிறகு பயணம் மலையை வகிடு எடுத்து செல்லும்போது, ஒரு இடத்தில் மொத்தமாக காட்டெருமை கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. சில சமயம் அந்த இடத்தில் காட்டு யானை கூட்டமும் இருக்குமாம். நாங்கள் செல்லும்போது, காட்டெருமை மட்டுமே காணக்கிடைத்தது.
வளைந்து நெளிந்து செல்லும் சாலை, ஆங்காங்கே ஹேர்பின் பெண்டு என, மலைப்பாதையின் பயணம் செய்தது சுவராஸ்யமாக இருந்தது. இடையே பாலத்தின் தடுப்பு சுவர்களில் `வரையாடுகள்’ நின்றன. புகைப்படத்திலும், வீடியோவிலும் பார்த்த வரையாடுகளை மிக நெருக்கத்தில் பார்த்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரொம்ப நேரம் நின்று பார்த்த பிறகே அங்கிருந்து கிளம்பினோம்.
பொதுவாக `நீலகிரி வரையாடுகள்’ என்றழைக்கப்படும் இந்த ஆடுகள், பார்ப்பதற்கு மான் போன்றே காணப்படும். ஆனால், ஆட்டு இனத்தை சேர்ந்தவை. அரிய உயிரினமாக கருதப்படும் வரையாடுகள் மொத்தமே தமிழ்நாட்டில் 3 ஆயிரத்திற்கு உள்ளே இருக்கும் என புள்ளி விபரங்கள் சொல்கின்றன.
தமிழ்நாட்டில் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வனப்பகுதியில் மட்டுமே இவை காணப்படுவதாக வனத்துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து மலைப்பாதையில் பயணிக்கும்போது, சில இடங்களில் சிங்கவால் குரங்குகள், மான்கள் தென்பட்டன. வால்பாறையை நெருங்கும்போது, தேயிலைக்காடுகள் நம்மை வரவேற்கின்றன.
அதேபோல், குளிரும் அதிகரிக்க துவங்கி விட்டது. ஒவ்வொரு இடத்திலும் சாலை வளைவுகளை கடக்கும்போது, அங்கே தேநீர் கடைகள் இருக்கின்றன. அங்கே ஸ்டாபிங்க போட்டு, குளிருக்கும் இதமாக தேநீர் பருகும்போது, அப்படி ஒரு திருப்தி. கூடவே எக் நூடுல்ஸ் காம்பினேசன் அருமை!.
வால்பாறையில் 2 நாட்கள் தங்கியிருந்துவிட்டு, திரும்பி வரும் வழியிலும், அதே தேநீர்கடைகளில் டீ குடித்துவிட்டு, டீயின் தித்திப்பு சுவையோடு, மலையை விட்டு கீழிறங்கினோம்.
-சி.அ.அய்யப்பன்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – ‘சுற்றுலா”. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.