இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
தஞ்சாவூரில் நடுக்காவேரி காவல் நிலையத்தில் தினேஷ் என்பவரை பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளார் இன்ஸ்பெக்டர் சர்மிளா. ‘என் தம்பி எந்த தப்பும் செய்யாதவர். அவரை விட்டுடுங்க’ என அவருடைய இரண்டு சகோதரிகளும் கெஞ்சியும், கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்தில் விஷம் குடித்துள்ளனர். ‘ என்ன நாடகமாடுறீங்களா…? செத்தா சாவுங்க’ என சாதிய வன்மத்தோடு பேசியுள்ளார் இன்ஸ் சர்மிளா. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக உயிருக்கு போராட, கடைசியாக அக்கம் பக்கத்தினர் வந்து 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் ஒரு சகோதரி கீர்த்திகா மரணம் அடைந்தார். அந்த குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. அரசு அதிகாரியாக வேண்டும் என கனவோடு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தவர். அவர் கனவை தான் சிதைத்துள்ளது காவல் நிலையம். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின், இவையெல்லாம் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.