`நீட், வரிப்பகிர்வு, குரியன் ஜோசப் தலைமையில் குழு’ – சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானம்

மத்திய அரசு தொடர்ந்து மாநில உரிமைகளைப் பறித்து மாநிலங்களுக்கு அநீதி இழைத்து வருவது தொடர்பான விவாதங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவையில் மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் மாநில சுயாட்சி – தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சட்டப்பேரவை

இதுகுறித்து சட்டபேரவையில் பேசியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், “மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மாநில சுயாட்சியின் முதல் குரல்

மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். மாநில சுயாட்சியின் முதல் குரல் என்றுமே தமிழ்நாட்டிலிருந்தே ஒலிக்கும்.

கலைஞர் – ஸ்டாலின்

ராஜமன்னார் குழுவின் சில பரிந்துரைகள்

ராஜமன்னார் குழு

51 ஆண்டுகளுக்கு முன்னர் 1969-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற போது ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு ராஜமன்னார் குழு பரிந்துரைகளை முன்வைத்து மாநில சுயாட்சி குறித்து தீர்மானம் இதே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மாநில உரிமைகளுக்கான 1983-ல் சர்க்காரியா கமிஷன், 2003-ல் புஞ்சி கமிஷன் அமைக்கப்பட்டும் ஏமாற்றம்தான்.

நீட், வரிப்பகிர்வு

தமிழ்நாட்டு மாணவர்களை நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு- நீட் தேர்வால் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டுவிட்டது. நீட் தேர்வால் ஒருதரப்புக்கு மட்டுமே பயன்பாடு. ஏழை மானவர்களுக்கு பயன்படவில்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு செலுத்தும் ஒரு ரூபாய்க்கு 20 பைசாதான் திருப்பி தருகிறது மத்திய அரசு. வரிப்பகிர்விலும் அநீதி இழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் மாநிலங்களின் வரி வருவாய் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்
ஸ்டாலின்

மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட அண்மையில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது. மத்திய அரசு இந்தியை திணிக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

குரியன் ஜோசப் தலைமையில் குழு

மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது; இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய குழு அமைக்க வேண்டும். மத்திய – மாநில உறவுகளை ஆராய நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும்; இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, நாகநாதன் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.

அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிபதி குரியன் ஜோசப் குழு அமைக்கப்படுகிறது. மத்திய அரசு – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராயும் குரியன் ஜோசப் குழு, ஜனவரி மாதம் தமது அறிக்கையை தாக்கல் செய்யும். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை முழுமையாக செயல்படுத்த செய்வோம்.” என்று மாநில சுயாட்சி – தீர்மானம் குறித்துப் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs