TVK: ‘நம் சமூகத்தில் சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்’-அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

TVK Vijay
TVK Vijay

சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்” என பதிவிட்டிருக்கிறார்.