`பாஜக கூட்டணியால் அதிமுக-வில் இருந்து நான் விலகுகிறேனா?’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப்ரல்14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பாஜக-வின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைந்தால் நான் கட்சியில் இருந்து விலகுவதாகத் திருமாவளவன் அவருடைய கருத்தைக் கூறியிருக்கிறார். இது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வதந்தி. நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்

எங்களின் குடும்பம் 75 ஆண்டுக்காலம் திராவிட பாரம்பர்யம் கொண்டது. தன்மானத்துடன் வளர்ந்த குடும்பம். பதவிக்காக யாருடைய வீட்டு வாசலிலும் நின்றதில்லை.

எங்களின் குடும்பத்தை அ.தி.மு.க., அடையாளம் காட்டியது. அந்தஸ்தை கொடுத்தது. என்னை அடையாளம் காட்டியது, அ.தி.மு.க.,வும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் தான்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பதவிக்காக ஜெயக்குமார் யார் வீட்டு வாசலிலும் நின்றதில்லை.அ.தி.மு.க., தான் என்னுடைய உயிர்மூச்சு” என்று கூறியிருக்கிறார்.