சென்னை: திருடருடன் துணிச்சலாகப் போராடி செயினை மீட்ட இளம்பெண்; குவிந்த பாராட்டு; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகராணி (26). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 10.4.2025-ம் தேதி வேலை முடிந்து வடபழனி கோயிலுக்கு யோகராணி சென்றிருக்கிறார். பின்னர் பேருந்தில் வீட்டுக்குச் செல்ல தி.நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென யோகராணி அணிந்திருந்த தங்கச் செயினைப் பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட யோகராணி, கழுத்தில் கிடந்த செயினை ஒரு கையால் பிடித்துக் கொண்டார்.

ராஜா

அடுத்து துணிச்சலாக மற்றொரு கையால் அந்த மர்ம நபரைப் பிடித்தார். பின்னர், திருடன் திருடன் எனச் சத்தம் போட்டார் யோகராணி. அப்போது பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் ஓடிச் சென்று அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவரிடம் மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரின் பெயர் ராஜா (40) என்றும் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் யோகராணி துணிச்சலுடன் செயின் திருடருடன் போராடியதில் அவர் அணிந்திருந்த 10.8 கிராம் எடையுள்ள தங்கச் செயின் தப்பியது. யோகராணியின் இந்தச் செயலைக் கண்ட பொதுமக்களும் போலீஸாரும் பாராட்டினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY