பொன்முடி பேச்சு: “ஏற்றுக்கொள்ள முடியாது; கண்டிக்கத்தக்கது” – அமைச்சருக்கு கனிமொழி எம்.பி கண்டனம்

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சிற்கு திமுக எம்.பி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பொன்முடி பெண்கள், சைவம் மற்றும் வைணவம் குறித்து கொச்சையாக பேசியிருந்தார்.

பொன்முடி பேசியது என்ன?

இந்த வீடியோ வைரலாக பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், சொந்தக் கட்சியை சேர்ந்த எம்.பி கனிமொழியும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் கண்டனம்
கனிமொழியின் கண்டனம்

கனிமொழியின் பதிவு

பொன்முடி பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பும் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ‘ஓசி டிக்கெட்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இவரது சர்ச்சை பேச்சுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே வருகின்றன.