காளீஸ்வரி நிறுவனத்தின் புதிய பயணம் – ஆறு நறுமணங்களில் ‘தீபம் அகர்பத்தி’ அறிமுகம்…

காளீஸ்வரி ரிஃபைனரி பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் பிரபலமான ‘கோல்ட் வின்னர்’ சமையல் எண்ணெயை உருவாக்கிய நிறுவனம், ஆன்மிக துறையிலும் புதிதாக அடியெடுத்து வைத்து ‘தீபம் அகர்பத்தி’யை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள சவேரா ஹோட்டலில் ஏப்ரல் 4 அன்று நடந்த இந்த விழாவில் வியாபார பங்குதாரர்கள், தொழில்துறை பிரமுகர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் நலம் விரும்பிகள் பலரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

தீபம் அகர்பத்தி அறிமுகம்
தீபம் அகர்பத்தி அறிமுகம்

புகை குறைவான நறுமண அகர்பத்திகள்

‘தீபம் அகர்பத்தி’ ஆறு அழகிய நறுமணங்களில் கிடைக்கிறது – ரோஜா, சந்தனம், லாவெண்டர், ப்ளாஸம், சாம்பிராணி மற்றும் மல்லி. இதன் தனித்துவமான அம்சம், கரி பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்டிருப்பதும்  புகை மிகவும் குறைவாக இருப்பதும் மற்றும் தனித்துவமான ஆறு தெய்வீக நறுமணத்தில் கிடைப்பதும் தான். எனவே இது பூஜை, தியானம் மற்றும் அமைதியான ஓய்வு நேரங்களுக்கு ஏற்றதாகவும், இனிய அனுபவத்தைத் தருவதாகவும் உள்ளது.

ஆன்மிகத்துடன் இணைந்த நோக்கம்

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. பிரேம் குமார் விழாவில் பேசுகையில், “தீபம் அகர்பத்தி மூலம் ஆன்மிகத் துறையில் எங்கள் பங்களிப்பை வலுவாக்குகிறோம். தூய்மையும் பாரம்பரியமும் உள்ள ஆன்மிக பொருட்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம். புதிய துறைகளில் நுழைவதற்கு இது ஒரு முக்கிய படியாகும்” என்று தெரிவித்தார்.

தரமும் புதுமையும் சங்கமம்!

மார்க்கெட்டிங் துணைத் தலைவர் திரு. டைரன் டால் கூறியதாவது, “காளீஸ்வரி எப்போதும் தரத்தையும் புதுமையையும் முன்னிறுத்தி செயல்படுகிறது. எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்கள், நுகர்வோரின் தேவைகளைப் புரிந்து, பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் தயாரிப்புகளை உருவாக்க உதவுகின்றன. தீபம் அகர்பத்தி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.

இந்த அறிமுகத்துடன், காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனம் தனது நுகர்வோர் பிரிவுகளை விரிவுபடுத்தி, இந்திய வீடுகளில் நம்பிக்கை, புதுமை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட பொருட்களை வழங்குவதற்கான தனது முயற்சிகளை மீண்டும் நிரூபித்துள்ளது.

தீபம் அகர்பத்தி அறிமுகம்