Gold Price Today : ‘இரண்டே நாட்களில் ரூ.2,600 உயர்வு!’ – கடந்த ஒரு வாரத்தின் டைம்லைன்

நேற்றை விட…

தங்கம் விலை - நேற்றை விட...
தங்கம் விலை – நேற்றை விட…

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1200-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம்
ஒரு கிராம் தங்கம்

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,560 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை

ஒரு பவுன் தங்கம்
ஒரு பவுன் தங்கம்

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,480 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி
ஒரு கிராம் வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107 ஆகும்.

குட்டி டைம்லைன்!

தங்கம் விலை - குட்டி டைம்லைன்!
தங்கம் விலை – குட்டி டைம்லைன்!

தங்கம் விலை குறைகிறது என்று கடந்த வாரத்தில் இருந்து மக்கள் ஆசுவாச பெரும் சந்தோஷத்தில் இருந்தனர். அந்த சந்தோஷத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தை எடுக்கத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலை குறித்தான குட்டி டைம்லைன் இதோ…

கடந்த வியாழக்கிழமையில் (ஏப்ரல் 3-ம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.8,560-க்கும், பவுனுக்கு ரூ.68,400-க்கும் விற்பனை ஆனது.

அதற்கு அடுத்த நாள் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விகித அறிவிப்பு உலகத்தை திக்குமுக்கு ஆட செய்ய, தங்கம் விலையும் சட்டென வீழ்ந்தது.

ஏப்ரல் 4-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும் குறைந்தது. அன்று தங்கம் கிராமுக்கு ரூ.8,400-க்கும், பவுனுக்கு ரூ.67,200-க்கும் விற்பனை ஆனது.

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 5) தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310 ஆகவும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 ஆகவும் விற்பனை ஆனது.

இந்த வாரத் தொடக்கத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285 ஆகவும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280 ஆகவும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 8) கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225 ஆகவும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800 ஆகவும் விற்பனை ஆனது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நான்கு நாட்களுக்கு தங்கம் விலை கிராமுக்கு ரூ.175-உம், பவுனுக்கு ரூ.1,400-உம் குறைந்திருந்தது.

விட்டதை பிடித்துவிட்டது!

தங்கம் விலை - விட்டதை பிடித்துவிட்டது
தங்கம் விலை – விட்டதை பிடித்துவிட்டது

இதற்கெல்லாம் சேர்த்து வைத்ததுப்போல, தங்கம் விலை நேற்று இரண்டு முறை உயர்ந்தும், இன்று வெளியாகி உள்ள விலைப்படியும் ‘விட்டதை பிடித்துவிட்டது’.

நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8,290 ஆகவும், பவுனுக்கு ரூ.66,320 ஆகவும் விற்பனை ஆனது.

நேற்று மாலை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ,8,410 ஆகவும், பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.67,280 ஆகவும் உயர்ந்தது.

அதாவது நேற்று ஒரு நாளிலேயே தங்கம் விலை கிராமுக்கு ரூ.185-உம், பவுனுக்கு ரூ.1,480-உம் உயர்ந்தது.

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.8,560-க்கும், பவுனுக்கு ரூ.1200 உயர்ந்து ரூ.68,480-க்கும் உயர்ந்துள்ளது. மீண்டும் பழைய உச்சத்தை தொட்டு விட்டது.

நேற்றும், இன்றும் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.335-உம், பவுனுக்கு ரூ.2,680-உம் உயர்ந்துள்ளது.

பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?

தங்கம் வாங்கலாமா? பொருளாதார நிபுணர்களின் கருத்து
தங்கம் வாங்கலாமா? பொருளாதார நிபுணர்களின் கருத்து

ட்ரம்ப் பரஸ்பர வரியினால் வெகுவாக குறைந்த வெள்ளி விலை மீண்டும் ஏற்றத்தில் செல்ல தொடங்கியுள்ளது. அந்த நான்கு நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.102 வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை ஏற்றம் குறித்து, “தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதும் இயல்பு தான். தங்கம் என்பது எப்போதுமே தங்கம். அதனால், அது வெகுவாக குறையும் என்று கூறமுடியாது.

குறைந்தபட்சம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,000-த்தை தொடாமல் நிலைத்தன்மையை அடையாது. தங்கம் விலை குறையும் போது, முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் முதலீடு செய்யலாம். இப்போது ஏற்றத்தில் இருக்கும்போது முதலீடு செய்வது அவ்வளவாக நல்லது அல்ல” என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.