கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களிடையே மோதல் வெடித்துள்ளது.

அசாருதீனின் நண்பர்களுக்கும், எதிர்தரப்பினரும் கேங் வாரில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் விசாரித்து அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து குனியமுத்தூர் டைமண்ட் அவன்யூ பகுதியில் இரண்டு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறி மோதல் வெடித்துள்ளது. அப்போது எதிர்தரப்புனர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அசாருதீனைச் சரமாரியாகத் தாக்கினார்கள்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். அருகில் உள்ளவர்கள் அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசாருதீனைத் தாக்கிய ஜூட் எனும் அசார், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரபீக் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்பாஸ், சம்சுதீன், முகமது ரஃபிக் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

மற்றவர்களைத் தேடி வருகிறார்கள். காவல்துறை விசாரணையில், இவர்களிடையே முன் பகை உள்ளது. பைக் மோதல் மட்டுமல்லாமல் பணம் கொடுக்கல், வாங்கலிலும் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs