தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்து வருகிறது.
நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது வந்த நிலையில் தற்போது திர்ப்பு வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், தமிழக அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறியுள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
> மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் வெறுமனே உட்கார்ந்திருக்க மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
> இரண்டாவது முறையாக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.
> சட்டப்பேரவை அனுப்பி வைக்கும் மசோதாக்களின் மீது அரசியல் சாசனம் வழங்காத அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
> மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு கொண்டுள்ள அமைச்சரவை குழுவின் அறிவுரையின்படி மட்டும்தான் மாநில ஆளுநர் செயல்பட முடியும் தன்னிச்சையாக செயல்பட அவருக்கு அதிகாரம் இல்லை.
> மக்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தான் ஒரு அரசை அமைக்கின்றனர். அப்படி அமைக்கப்பட்ட அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆளுநர்கள் முட்டுக்கட்டை போடக்கூடாது.
தீர்ப்பின் முழுமையான தகவல்கள் விரைவில்…