அமைச்சர் கே.என் நேருவின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவரின் சகோதரர் ரவிச்சந்திரன் டி.வி.ஹெச் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ரவிச்சந்திரனின் கட்டுமான நிறுவனங்கள், அவருக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

t v h quadrant
t v h quadrant

குறிப்பாக தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே சோதனையில் இறுதியிலேயே சோதனைக்கான முழு விரவம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel