`Happy 50th Birthday’ – மைக்ரோசாப்ட் மலரும் நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்!

‘மைக்ரோ சாப்ட்’ – பெரும்பாலானவர்களின் முதல் கம்ப்யூட்டர் பயன்பாட்டு அனுபவத்தில் கீ போர்ட், மவுஸ், சி.பி.யூ, மானிட்டரை தாண்டி மிக பரிச்சயமான ஒரு சொல்.

இன்று ஆயிரமாயிரம் சாப்ட்வேர்கள் வந்திருக்கலாம். ஆனால், எம்.எஸ் வோர்ட், எம்.எஸ் பவர் பாயிண்ட், எம்.எஸ் எக்ஸல் ஆகியவை ‘இஸ் நாட் ஏ வோர்ட்; ஆன் எமோஷன்’ ரகம்.

இரு சிறு வயது நண்பர்களான பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் இணைந்து நிறுவிய நிறுவனம் தான் ‘மைக்ரோசாப்ட்’.

பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் மெமரீஸ்!
பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் மெமரீஸ்!

தனது 19-வது வயதில் 1975-ம் ஆண்டு பில்கேட்ஸ் இணைந்து நிறுவிய நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய வயது 50.

இந்த 50 ஆண்டுகளை நினைவுக்கூரும் விதமாக, பில் கேட்ஸ் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மைக்ரோசாப்டின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் எடுத்த மூன்று புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக பில் கேட்ஸ், “ஹேப்பி 50-வது பிறந்தநாள். நினைவுகளுக்கும், மோசமான புகைப்படங்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel