‘நாங்க மட்டும் சும்மாவா?’ அமெரிக்கா மீது வரி விதித்த சீனா; ‘பயந்துவிட்டனர்’ எச்சரிக்கும் ட்ரம்ப்!

‘ட்ரம்ப்பின் பரஸ்பர வரி’ – இது தான் பொருளாதார உலகின் தற்போதைய‌ ஹாட் டாப்பிக்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதி காத்திருந்தாலும், சீனா ட்ரம்ப்பின் வரி கொள்கைக்கு அதிரடி காட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட அமெரிக்க பரஸ்பர வரி பட்டியலில், சீனப் பொருட்கள் மீது 34 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த வரி வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

முதலில் அமெரிக்கா; அடுத்து சீனா - மாற்றி மாற்றி வரி விதித்து கொள்ளும் இரு நாடுகள்!
முதலில் அமெரிக்கா; அடுத்து சீனா – மாற்றி மாற்றி வரி விதித்து கொள்ளும் இரு நாடுகள்!

சீனாவின் எதிர்வினை

இதற்கு எதிர்வினையாற்றி உள்ளது சீனா. நேற்று, சீனாவின் நிதி அமைச்சகம், “சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் மீது 34 சதவிகித வரி விதிக்கப்படும். இது வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது” என்று அறிவித்துள்ளது.

ட்ரம்ப்பின் பதில்

சீனாவின் இந்த வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், “சீனா தவறு செய்துவிட்டார்கள். அவர்கள் பயந்துவிட்டனர். அது தான் அவர்களால் கடைசிக்கு செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.