திருச்சி: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை; பாதிரியார் உள்ளிட்ட இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இதன் அருகிலேயே பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. இதில், 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இதில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடியைச் சேர்ந்த பாதிரியார் குழந்தைநாதன்(வயது 48) வார்டனாக பணியாற்றி வருகிறார்.

இவரது நண்பரான அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் முருகன் கோட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜன்(வயது 40). இவர், பாதிரியாருக்கான படிப்பைப் படித்து வருகிறார்.

இந்நிலையில், விடுமுறை நாட்களில் விடுதிக்கு வரும் சுந்தர்ராஜன், விடுதி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவர்கள், குழந்தைநாதனிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

trichy

எனவே இதுகுறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்திக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

அவரது விசாரணைக்குப் பிறகு லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராகுல் காந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb