`தமிழ்நாட்டுக்கு ரூ.2151 கோடி; நிலைக்குழுவின் அறிவுரையை புறக்கணிக்கிறதா மத்திய அரசு?’ – ப.சிதம்பரம்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டின் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை வழங்காமல், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் ‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம்’ என்ற பேச்சை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். அதற்கு தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு எம்.பி-க்களை அவமதிக்கும் வகையில் ‘அநாகரிகமாவர்கள்’ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதைக் கண்டித்தும், மத்திய அரசின் ‘தேசியக் கல்விக் கொள்கை’, ‘தொகுதி மறுவரையறை’ திட்டங்களைக் கண்டித்தும் ‘தி.மு.க’ தீவிரமான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

ப.சிதம்பரம்

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல கேரளம், மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி தர மறுத்து வருவதால் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில், “கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ 328 கோடி, ரூ 2151 கோடி, ரூ 1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.

இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித் துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக் கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது. இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Vikatan Whatsapp Channel