‘நீங்கள் பிரதமராவீர்களா?’ – கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?

பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது.

அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் பிம்பம் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

வருகிற செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி 75 வயதை தொட உள்ளார்.

மோடிக்கு 75! 'அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்தா?'
மோடிக்கு 75! ‘அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்தா?’

கடந்த 10 ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்கு செல்லாத மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.

இதனால், மோடிக்கு 75 வயதாக உள்ளது. அடுத்து என்ன என்பது போன்ற பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது.

அப்படி பிரதமர் பதவிக்கு ரேஸ் நடந்தால் நிச்சயம் அதில் யோகி ஆதித்யநாத் பெயர் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், “நீங்கள் பிரதமராக ஆக வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறித்து உங்களுடைய கருத்து என்ன?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நான் உத்தரப்பிரதேச முதலமைச்சர். கட்சி என்னை உத்தரப்பிரதேச மக்களுக்காக இங்கு அனுப்பியிருக்கிறது.

அரசியல் என்னுடைய முழு நேர பணி அல்ல. நான் ஒரு யோகி.

எவ்வளவு நாள் இங்கு இருக்கிறோமோ, அவ்வளவு நாட்கள் இங்கு உழைப்போம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு” என்று பதிலளித்துள்ளார்.