தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு கடந்திருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் விஜய்.
இந்நிலையில் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் திருவான்மியூரில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களை கீழே காணலாம்.

தவெக பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள்
-
இருமொழி கொள்கையில் உறுதி
-
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது
-
சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
-
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
-
மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின். பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
-
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.
-
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்
-
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான கையாலாகாத தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
-
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
-
இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்.
-
தேர்தல் கூட்டணி நிலைப்பாடு – தலைவருக்கே முழு அதிகாரம்.
-
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
-
கட்சிகாக உழைத்து மறைந்த கழக தொண்டர்களுக்கு இரங்கல்.

-
சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம். மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
-
பன்னாட்டு அரங்குக்கு தந்தை பெரியாரின் பெயர் சூட்ட வேண்டும்.
-
கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களின் கொள்கையை எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.
`கனிமொழி அக்கா, உங்க அண்ணனிடம் சொல்லி பிரச்சனைகளை தீர்த்து வையுங்க… இல்லைனா எங்க அண்ணன் தீர்த்து வைப்பார்!’
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சேலம் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தினி உரையாற்றினார். அப்போது, “பெண்களுக்கு இலவச பேருந்து, மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையெல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த திமுக அரசில் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பே இல்லை. கனிமொழி அக்கா மற்ற ஆட்சியில் இளம் விதவைகள் அதிகம் இருப்பதாக பேசுவார். இப்போது என்ன செய்கிறார். உங்களின் அண்ணனிடம் சொல்லி பிரச்சனைகளை தீர்த்து வையுங்களேன். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். எங்கள் அண்ணன் 2026 இல் எல்லாவற்றையும் தீர்த்து வைப்பார்.” என்றார்.

எப்படி அப்பா என சொல்ல மனம் வருகிறது?
அதைத் தொடர்ந்து உரையாற்றிய உறுப்பினர் சேர்க்கை மாநில இணைச் செயலாளர் யாஷின், “தி.மு.க அரசின் கவனம் மொத்தமும் அவர்களின் அப்பா மீதுதான் இருக்கிறது. எங்களின் வெற்றித் தலைவர் உங்க மகன், உங்க அண்ணன், உங்க தோழன் என சொன்னதை காப்பி அடித்துதானே அப்பா என்கிறீர்கள்? பெண்களுக்காக எதையுமே செய்யாமல் எப்படி அப்பா என சொல்ல மனம் வருகிறது. யார் அந்த சார் என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லையே. இவர் எங்களுக்கு அப்பாவா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.