தவெக விஜய்: “2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்…” – கொந்தளித்த ஆனந்த்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முதல் பொதுக்குழுக் கூட்டத்தைத் திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திவருகிறது.

இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், துணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதாவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உரையாற்றியபோது, “மற்ற கட்சிகளில் போஸ்டர் ஒட்டியவர்கள் எல்லாம் கடைசி வரை போஸ்டர்தான் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும்.

ஆனந்த்

ஆனால் நம் த.வெ.க-வில் மட்டும்தான் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிவியில் பேட்டி கொடுப்பவர்கள், விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் எல்லாம், த.வெ.க கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இரண்டாம் கட்ட தலைவர்கள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் உங்களுக்கு என்ன பிரச்னை?

இரண்டாம் கட்ட தலைவர்களைப் போட்டால் கட்சி இரண்டு, மூன்றாக உடையும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எங்கள் கட்சியில் பதவி கொடுத்தவர்கள் எல்லோரும் கட்சிக்காக உழைத்தவர்கள். எனவே, இந்த கட்சி எப்போதும் உடையாது.

உங்களுடைய கணக்கு தவறானது. கட்சியினுடைய வளர்ச்சியைப் பார்த்து மிரண்டு கொண்டிருக்கிறார்கள். எங்கும் தலைவருக்குப் பெரும் வரவேற்பும், உற்சாகமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் சிலர் 2026-ல் முதல்வர் நான்தான் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்… என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த்

தலைவர் விஜய் முதலமைச்சராக அமருவதற்காக நாங்கள் எல்லோரும் மக்களோடு மக்களாக இருந்து எப்போதும் உழைப்போம்.

யார் எந்த கூட்டணியாக இருந்தாலும் 234 தொகுதியிலும் தலைவர்தான் வேட்பாளர். உங்கள் முகம்தான் வேட்பாளர்.

உங்களுக்காக உண்மையாக உழைக்கும் கூட்டம் நாங்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேடையில் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார் எனப் பார்க்காதீர்கள். அவர் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

மிகவும் சின்சியராக கட்சிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். 24/7 – அரசியல் பற்றியும், கட்சி பற்றியும், தொண்டர்கள் பற்றியும், மக்கள் பற்றியும் யோசித்துக் கொண்டு இருக்கிறார். கட்சியில் புதிதாக இணைபவர்களுக்கும் பதவிகள் வழங்கப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs