`அண்ணாமலைக்கு முன்னரே’ அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் – சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.

தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.2025), டெல்லிக்கு பயணமான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணியும் அன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.

அமித் ஷாவும், எடப்பாடியும்
அமித் ஷாவும், எடப்பாடியும்

அமித் ஷாவும், எடப்பாடியும்

‘2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்’ என்று அந்த சந்திப்பு குறித்து அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட, எடப்பாடி பழனிசாமியோ, ‘கூட்டணி குறித்து பேச இன்னும் நாள்கள் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நலன் குறித்து தான் பேசினோம்’ என்று அந்த சந்திப்பை மக்கள் நலன் குறித்தான சந்திப்பாக கடந்துவிட்டார் அல்லது அமைதியாக இருந்துவிட்டார்.

அண்ணாமலை டெல்லி விசிட்

இந்த நிலையில், நேற்று, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். இந்தப் பயணம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஆலோசனைக்கானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சத்தமே இல்லாமல்…

இவையெல்லாம் ஒருபக்கம் விறுவிறுவென போய்கொண்டிருக்க, எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்த அதே நாள் காலையில் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் சத்தமே இல்லாமல் அமித் ஷாவை சந்தித்துள்ளார்.

அண்ணாமலை டெல்லிக்கு பயணமான நேற்று இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர்.

ஆக, அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சி தலைவர்கள் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டனர்.