‘இது அரசியல் பிளாக் காமெடியின் உச்சம்’ – யோகி ஆதித்யநாத் கருத்துக்கு ஸ்டாலின் காட்டம்

தற்போது, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது.

‘ஓட்டு வங்கிக்காக…’ -ஆதித்யநாத்

இதுக்குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேர்காணல் ஒன்றில், “ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறப்போது, இந்த மாதிரி பிராந்திய மற்றும் மொழி பிரிவினையை உருவாக்க முயலுகிறார்கள்” என்று மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்து பேசியுள்ளார்.

‘இது பிளாக் காமெடி’ – ஸ்டாலின்

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இரு மொழி கொள்கை மற்றும் நியாயமான தொகுதி மறுவரையறை என்கிற தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடெங்கும் எதிரொலிக்கின்றது. இதனால், பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

‘பிரிவினைவாதத்தை உருவாக்க முயலுகிறார்கள்’ – யோகி ஆதித்யநாத்

பாஜகவின் தலைவர்களின் நேர்காணல்களை பாருங்கள்.

தற்போது மரியாதைக்குரிய யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து நமக்கு பாடம் எடுக்க நினைக்கிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடாக இல்லையா; இது அரசியல் சார்ந்த பிளாக் காமெடி உச்சம் ஆகும்.

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; நாங்கள் திணிப்பையும், ஆதிக்கத்தையும் தான் எதிர்க்கிறோம்.

இது ஓட்டுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போர்” என்று பதிவிட்டுள்ளார்.