வெளிநாடு செல்லும் சென்னை அதிகாரிகள்; ‘இந்தூருக்கு செல்லுங்கள்’ – கார்த்தி சிதம்பரம் அதிருப்தி

சென்னையில் தினமும் கிட்டதட்ட 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் தினமும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்தக் குப்பைகள் பல வகைகளில் மாற்றி பயன்படுத்தப்படுகிறது. சில குப்பைகள் மக்கவும் வைக்கப்படுகிறது.

இருந்தும், இந்த இடங்களை தாண்டி பல இடங்களில் குப்பைகளை கொட்டுவது சாதாரணமாக உள்ளது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இந்தக் குப்பைகளை ‘எப்படி மாற்றி பயன்படுத்தலாம்?’ என்றும் மாற்று ஆலோசனைகள் செய்யப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.

Waste Management கற்றுகொள்ள சென்னை அதிகாரிகள்; கார்த்திக் சிதம்பரம் அதிருப்தி
Waste Management கற்றுகொள்ள சென்னை அதிகாரிகள்; கார்த்திக் சிதம்பரம் அதிருப்தி

இதற்கான தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வரும் மே மாதம் சென்னையை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் பார்சிலோனா போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு, நேரில் கண்டு கற்றறிந்து வர உள்ளனர். இதற்கு உலக வங்கி நிதி வழங்குகிறது.

கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்?

இதுக்குறித்து மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம், “இப்படி முன்னர் போன கற்றல் சம்பந்தமான பயணங்களில் கற்றுக்கொண்ட எதாவது ஒன்று இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறமுடியுமா?

மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள், உடைந்த நடைபாதைகள், குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவை சென்னையின் தனிச்சிறப்புகள்.

கற்றல் பயணத்தை முதலில் இந்தூரில் இருந்து ஆரம்பியுங்கள்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.