இதில் பேசியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், “இந்திய ஜனநாயகத்தைக் காக்க நாம் அனைவரும் ஓர் அணியில் திரண்டிருக்கிறோம் என்பதை இந்தியாவிற்கு உணர்த்துவதாக உங்களின் இந்த வருகை அமைந்துள்ளது. இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாச்சி உரிமைகளைக் காக்க நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது.
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல. தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது.
எப்போதும் மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக. சொந்த நாட்டில் அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 6 முதல் 10 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நெரிடும். மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பா.ஜ.க. எப்போதும் இருந்து வருகிறது. மாநில உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். ” என்று பேசியிருக்கிறார்.