UPSC/TNPSC: குரூப் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது? – ஏராளமானோர் பங்கேற்ற பயிற்சி முகாம்

ஆனந்த விகடன், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து ‘UPSC/TNPSC I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?என்ற நிகழ்ச்சி இன்று மதுரையில் நடைபெற்றது.

குரூப் தேர்வு பயிற்சி முகாம்

ஆனந்த விகடன், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம்களை பல ஆண்டுகளாக நடத்திவருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயிற்சி முகாம் தொடங்கியது. இந்நிகழ்வில் வருமான வரித்துறை ஆணையர் வி.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.டி.ஷாலினி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குரூப் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது? அதற்குத் தாயாராவதற்கான வழிகள் என்ன என்பது குறித்து தங்களுடைய அனுபவங்களிலிருந்து ஆலோசனைகள் வழஙகினார்கள்.

கலந்து கொண்டவர்கள்

இவர்களுடன் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கு தங்கள் அகடாமி கொடுத்து வரும் பயிறசி பற்றியும், அதற்காக ஆற்றி வரும் பங்களிப்பு குறித்தும் பேசினார். இந்தப் பயிற்சி முகாமில் ஏராளமான கல்லூரி மாணவர்களும், போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்களும் கலந்துகொண்டனர்.