‘தைரியம் இருந்தா என் பதில கேட்டுட்டு வெளியே போங்க’ – சட்டசபையில் ஸ்டாலின் vs எடப்பாடி

2025-26 ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை கடந்த 14 ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறுகிறது. தொடர்ந்து சட்டப்பேரவையில் இன்று சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த விவாதமும் நடைபெற்றது. அந்தவகையில், “ஒரே நாளில் 4 கொலைகள் நடைபெற்று இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அவையில் கூற அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “குற்றங்கள் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை.

நடந்துள்ளது, நடந்த சம்பவங்ளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உங்களைப் போல டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் என நான் கூறவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி சாத்தான் குளம் பிரச்னையை நீங்கள் மறந்துவிடக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்ய, “தைரியம் இருந்தால் என் பதிலை கேட்டு விட்டு வெளியே செல்லுங்கள்” என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின், “2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்த போதும் அதிக கொலை நிகழ்ந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்ட்ட சத்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.2024 ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது” என்றார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks