`ஒன்றிய அரசு தரவேண்டியது மட்டும் ரூ.2.63 லட்சம் கோடி’ – பேரவையில் வானதிக்கு தங்கம் தென்னரசு பதில்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று பேரவையில் யார் ஆட்சியில் அதிக கடன் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, “கொரோனாவால் கடன் வாங்கியதாக அ.தி.மு.க-வினர் கூறுகின்றனர். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோதும் கொரோனா இருந்தது.” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் ஆட்சியில் 10 மாதங்கள் கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்தது. அரசுக்கு மது, பத்திரப்பதிவு என எந்த வருவாயும் வரவில்லை. ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா இருந்தாலும் ஊரடங்கு இல்லை, வரி வரிவாய் இயல்பாக இருந்தது” என்றார்.

அதற்கு தங்கம் தென்னரசு, “நீங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதி வாங்கினீர்கள். நாங்கள் மத்திய அரசுடன் உரிமைப் போராட்டம் நடத்தி வருவதால் அவர்களிடம் இருந்து எங்களுக்கு நிதி வரவில்லை. எனவே அவர்களுடன் போராட்டம் நடத்துகிறோம், கடன் வாங்குகிறோம்.” என்றார்.

பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்

இதற்கு எதிராக கேள்வி எழுப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “கடன் வாங்காமல் மாற்று வழிகளை தமிழ்நாடு அரசு தேட வேண்டும்” என்றார்.

அதற்கு எழுந்து பதிலளித்த தங்கம் தென்னரசு, “2020 – 21-ம் ஆண்டில் 3.28 % ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை, தற்போது 1.17 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ. 2.63 லட்சம் கோடியை கொடுக்கவே இல்லை. இது தமிழ்நாட்டின் மீதான கடனில் 32 சதவீதம்.” என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play