மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலை ஈச்சனேரி கண்மாய் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பெருங்குடி போலீசார் விசாரணையில் எரிந்த நிலையில் உயிரிழந்தவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் பணிபுரிந்து வந்த தனிப்படை போலீசான மலையரசன் (வயது 36) என்பது தெரியவந்தது.
அதனையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன், டி.எஸ்.பி அன்சுல் நாகர், எஸ்.பி அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிதுரம் ஓடிச்சென்றது. தடய அறிவியல் துறையினர் பிரேதத்தை ஆய்வு செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் மலையரசனின் மனைவி கடந்த 1 ஆம் தேதி விபத்தில் காயம் ஏற்பட்டு மதுரை சிந்தாமணியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், அந்த மருத்துவமனையில் மனைவியின் சிகிச்சை விவரம், செலுத்திய கட்டணத்துக்கான ரசீதுகளை வாங்குவதற்காக மலையரசன் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில்தான் அந்த மருத்துவமனையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததுளார். மர்மமான முறையில் இறந்து கிடந்ததது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks