JCOM: தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய 7 கண்கள் என்னென்ன?

சர்வதேச அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் JCI அமைப்பு, தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் JCOM (Jaycees chamber of commerce) மூலம் பயிற்சியளித்து வருகிறது. அந்த வகையில், JCOM L MADURAI 1.0 -இன் THRIVE 150-வது வார விழாவும், புதிய விருந்தினர் சந்திப்பும் கடந்த 15 ஆம் தேதி மதுரை பரவையிலுள்ள ஆகாஷ கிளப்பில் நடந்தது.

50 நாடுகளில் உள்ள தொழில் முனைவோர்களை ஒருங்கிணைத்துள்ள JCOM, இந்தியாவில் மண்டல வாரியாக தன் அங்கத்தினர்களுக்குள் தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் தொழிலில் வெற்றி பெற பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

JCOM நிகழ்ச்சி

JCI ZONE 29-இன் தலைவர் மகேந்திரன், IPZC ZONE 29-இன் செல்வகுமார் ஆகியோர் தலைமையேற்க, டேபிளின் தலைவர் கௌசிக், பயிற்சியாளர் பிரசன்னா, துணைத்தலைவர் வினோத்குமார், செயலாளர் பிரதீப் ராயன், பொருளாளர் பாலாஜி கிருஷ்ணன், இயக்குநர்கள் ரஞ்சித், நளினி பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் JCOM – இன் நோக்கம், செயல்பாடு, எதிர்கால இலக்கு குறித்துப் பேசப்பட்டது. இதன் உறுப்பினர்களும், விருந்தினர்களும் இதன் மூலம் கிடைத்த பலன்களையும், தொழில் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

தொழில் முனைவோரிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து சேரன் அகாடமியின் தலைமை நிர்வாகி ஹுசேன் அகமது பேசும்போது, “தொழில் செய்வோர் ஒவ்வொரு விஷயமாக லியர்னிங் பண்ணும்போதுதான் அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்ல முடியும். ஒரு பிசினஸ் தொடங்கும்போது முக்கியமாக 4 விதிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதில் முதல் விதி, உடல் நலத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான். நாம் பிசினெஸ் செய்வதே மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தான்.

உடல் நலத்தில் நம்மை நாமே ஏமாற்றக்கூடாது. அதனால் ஃபிட்னசில் கவனம் செலுத்த வேண்டும். பிசினஸில் நம்முடைய கோல்’ஐ அச்சீவ் பண்ணுவதற்கு ஃபிட்னஸ் அவசியம். இந்த ஈவெண்ட் மூலம் நிறைய காண்டக்டுகளை ஏற்படுத்தி எல்லோரும் பிசினஸில் வெற்றி பெற வேண்டும்” என்றவர், நாம் எப்படித் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும், நம் தயாரிப்புகளை எப்படி மற்றவரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் சுவாரசியமாகப் பேசினார்.

ஜெகே முத்து

டிரேட் மார்க், காப்பிரைட், அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து கமலம் வெஞ்சர்ஸ் நிறுவனரும், மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக அமைப்பின் DIGIT-AAL FORM -இன் தலைவருமான ஜெ.கே. முத்து பேசும்போது, “இருபது ஆண்டுகளுக்கு முன் டிரேட் மார்கை பாதுகாப்பதில் எனக்கு ஏற்பட்ட வலிதான் இன்று அதுகுறித்து மற்றவர்களுக்கு ஆலோசனை கூற, வழிகாட்ட, விழிப்புணர்வை ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது..” என்றவர், தொடர்ந்து பேசும்போது, “தொழில் செய்து வருபவர்களிடமும் தொழில் முனைவோர்களிடமும் Sevan Eyes for entrepreneur என்பது குறித்துப் பேசுவேன்.

தொழில் செய்கிறவர்களுக்கு இருக்க வேண்டிய 7 கண்கள் என்னவென்றால், இன்னொவேஷன், இண்டலக்சுவல் பிராப்பர்ட்டி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டர்நேஷனல் பிசினஸ், இன்சைட் இண்டகிரிட்டி, இம்ப்ளிமண்டேஷன் உள்ளிட்டவைதான். தற்போது 7 கண்களைப் பற்றியும் பேச நேரம் இல்லை என்பதால் இண்டலக்சுவல் பிராப்பர்ட்டி குறித்து மட்டும் பேசுகிறேன்” என்றவர் அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பது, டிரேட் மார்க், பிராண்ட் வேல்யூ குறித்து எளிமையாகவும் தெளிவாகவும் பேசினார்.

இந்த நிகழ்வில் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள், புதுத்தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டார்கள்.

JCOM நிகழ்ச்சி

நாணயம் விகடன் மீடியா பார்ட்னராகப் பங்களிப்பு செய்த நிலையில் மகிழ்ச்சி சாஃப்ட்வேர்ஸ், ஜி நோட், ஸ்ரீ அபிநயா ஜூவ்வல்லர்ஸ் ஸ்பான்சர் செய்ய, எஸ்.பி.ஐ பேங்கிங் பார்ட்னராகவும் செயல்பட்டது. மேலும், கோ-ஸ்பான்சர்களாக ஸ்ரீ ஜெயம் ஜூவல்லர்ஸ், சாஸ்தா ஸ்வீட்ஸ், பி.ஆர்.ஹாஸ்பிடல், எம்.கே. டிரேடிங் கம்பெனி, லெனோவோ, பாண்டியன் பிக்கிள்ஸ், வி ஸ்மார்ட் அசோசியட்ஸ், ஏ.ஆர் வர்ணம் டிரேடர்ஸ், ஷார்ப் கம்ப்யூட்டர்ஸ் , ஏஞ்சல்ஸ் ஃபிஷ் பிக்கிள்ஸ், ஸ்ரீ காயத்ரி எண்டர்பிரைசஸ், ஹெச்.எம்.எஸ் இண்டீரியர் ஒர்க்ஸ், எஸ்.எஸ்.கே டூர்ஸ், விக்னேஷ் கிராபிக்ஸ் உள்ளிட்டவைப் பங்களித்தன.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks