Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா’ – முதல்வர் ஸ்டாலின்

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 40 இடங்களில் மலையேற்றம் செல்வதற்கான இணையவழி முன்பதிவு இணையதளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

எளிமையான, மிதமான, கடினமான மலையேற்றம் என மூன்றாகப் பிரித்து தமிழ்நாட்டின் மொத்தம் 40 இடங்களில் மலையேற்றத்தை மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்தது. திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தேனி, சேலம், திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டஙகளில் இந்த மலையேற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

Trek tamilnadu

மலையேற்றம் செய்ய விரும்புவோர் ‘https://trektamilnadu.com‘ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். ரூ.799 முதல் ரூ.3500, ரூ.4000 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் பலரும், இப்போது வித்தியாசமான, சாகச அனுபவமான இந்த மலையேற்ற சுற்றுலா மீது ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

How To: மலையேற்றம் செய்வது எப்படி?| How To Prepare For Trekking?

இந்நிலையில், “TrekTamilNadu திட்டத்தின் மூலம் 3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதில் 49.51 லட்சம் நேரடியாக பழங்குடி இளைஞர்களுக்குச் சென்று, சுற்றுலாவை சமூகங்களுக்கு அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நீங்கள் மலையேற்றம் சென்றிருந்தால், அதன் அனுபவத்தைக் கமெண்டில் பகிருங்கள்.