‘அவரின் பாசிட்டிவிட்டியை பாராட்டுகிறோம்’ – மோடியை பாராட்டும் சீனா… காரணம் என்ன?

லெக்ஸ் ஃப்ரித்மேன் உடனான இந்திய பிரதமர் மோடியின் பாட்காஸ்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதற்கு பரவலான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்தப் பாட்காஸ்ட்டை சீனாவும் பாராட்டியுள்ளது.

அந்தப் பாட்காஸ்ட்டில் மோடி இந்தியா – சீனா உறவு குறித்து, “கடந்த அக்டோபர் மாதம், எனக்கும் சீனா அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பிற்கு பிறகு இந்திய – சீனா எல்லை பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக சுமூகமாகி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மற்றும் நம்பிக்கை மீண்டும் நிச்சயம் திரும்பும்.

இந்தியா – சீனா

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் இயல்பானது தான். ஆனால், அந்த வித்தியாசங்கள் சண்டையாக மாறாமல் பார்த்து கொள்வது தான் முக்கியம்” என்று பேசியுள்ளார்.

இதுக்குறித்து சீனா வெளியுறவு துறை அமைச்சர், “இந்தியா மற்றும் சீனா எல்லை என்பது பரஸ்பர கற்பித்தல்கள் மற்றும் தோழமையால் 2,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளால் ஆனது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனா வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், “பிரதமர் மோடியில் பாசிட்டிவ் பதில்களை சீனா வரவேற்கிறது” என்று கூறியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel