America: 3.6 மில்லியன் கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு… பின்னணியில் எலான் மஸ்க்! – காரணம் என்ன?!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அறிவிப்புகள், சில சில அதிர்ச்சிகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தற்போது அமெரிக்க அரசு அலுவலகங்களின் கிட்டதட்ட 2 லட்சம் கிரெடிட் கார்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

இது டெஸ்லா நிறுவனத்தின் தலைவர், அமெரிக்க DOGE துறையில் லீட், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நண்பர் எலான் மஸ்க்கின் நகர்வு தான் இந்த கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு.

அமெரிக்க அரசு அலுவலகங்களில் உள்ள பயன்படுத்தப்படாத, அளவுக்கு அதிகமாக உள்ள கிரெடிட் கார்டுகள் தான் தற்போது செயலிழக்க செய்துள்ள 2 லட்சம் கிரெடிட் கார்டுகள். இந்த செயலிழப்புகள் உடனே செய்யப்படவில்லை. 3 வார ஆடிட்டுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?!

இதுக்குறித்து டாஜ் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அந்த வலைதளத்தில், “இந்த ஆடிட் தொடங்குகையில் சுமார் 4.6 மில்லியன் ஆக்டிவ் கிரெடிட் கார்டுகள் இருந்தன. அதனால், இதில் வேலை செய்ய இன்னமும் இருக்கின்றது” என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த செயலிழப்பு அரசு அலுவலகங்களின் பணியை பாதிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால், ‘அது எப்படி?’ என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks