கடந்த 26-ம் தேதி அஜர்பைஜானைச் சேர்ந்த விமானம் ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு வரும் வழியில் திசைமாறி, கஜகஸ்தானில் விழுந்தது. இந்த சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதலே காரணம் எனக் கூறப்படுகிறது. ரஷ்ய அரசு விமானத் தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில், விமானம் தாக்கப்பட்ட நாளில் ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.

அஜர்பைஜான் தலைவர் இல்ஹாம் அலியேவ்விடம் நடந்த சோகமான நிகழ்வுக்காக புதின் மன்னிப்புக் கேட்டதாக ரஷ்யா (Putin) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்யா இராணுவத்தால் விமானத்தை சுடப்பட்டதாகக் கூறப்படவில்லை.
ரஷ்ய தரப்பில் இப்போதுவரை உக்ரைன் ட்ரோன்கள்தான் விமானத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அலியேவ் ரஷ்யாவின் மீதான வெளிப்புற தலையீடே நடைபெற்ற சம்பவத்துக்கு காரணம் என உறுதிபடுத்தியிருக்கிறார். இதனால் ரஷ்யா-அஜர்பைஜான் இடையே ராஜாந்திர ரீதியான முரண்கள் இல்லை. எனினும் அஜர்பைஜான் மக்களிடையே ரஷ்யா தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற குரல் எழுந்திருக்கிறது.
சம்பவம் நடந்த அன்று க்ரோஸ்னி மொஸ்டோக் மற்றும் விளாடிகாவ்காஸ் ஆகிய பகுதிகளில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. அதற்கு ரஷ்ய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் விமானம் பலமுறை க்ரோஸ்னியில் தரையிறங்க முயற்சித்திருக்கிறது என புதின் அலியோவிடம் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யாவின் வான் பரப்பில் நடந்த இந்த சோகமான சம்பவத்துக்கு புதின் மன்னிப்புக் கோரினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணகுணமடைய பிராத்திப்பதாக கூறினார்” என ரஷ்யாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

அஜர்பைஜான் அரசு தரப்பில், ‘விமானத்தில் இருக்கும் துளைகள் மற்றும் பிற சாட்சியங்களின் மூலம் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் எதுவுமில்லை, தாக்குதல் நடந்திருப்பது உறுதி’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த நாட்டின் ஆயுதங்கள் தாக்கியிருக்கக்கூடும் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
உயிர்பிழைத்தவர்கள் கடைசி நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தத்தைக் கேட்டதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ரஷ்யா பொய் சொல்வதாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து மன்னிப்புக்கோரச் செய்ய வேண்டும் என அஜர்பைஜானிடம் பிற நாடுகள் முறையிட்டுள்ளன.
Azerbaijan Airlines crash: Russian air defences may have shot down the passenger jet after misidentifying it as drones, US intelligence suggests.
Russian President Putin Apologises to Azerbaijan over Azerbaijan Airlines Plane Crash That Killed 38. pic.twitter.com/fqYaPLTLO6
— Param Choudhary (@Param_117) December 29, 2024