வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.
நிதி நிறுவனம் நடத்திவரும் செந்தில்குமார், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால், செந்தில்குமார் சம்பாதித்த பணத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பிருக்கிறதா என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் உலாவின.

இந்த நிலையில், சென்னையில் நடந்த செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம், இந்த ரெய்டு தொடர்பாக செந்தில்குமார் தங்கள் உறவினரான, அவர் சம்பாதித்த பணத்துக்கும் தங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு விளக்கமளித்த அண்ணாமலை, “வருமான வரித்துறை சமீபத்தில் ஒட்டன்சத்திரம் அருகில் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தியது. அவர் என்னுடைய உறவினர்தான். எங்களின் சொந்தக்காரருக்கு அவரின் குடும்பத்திலிருந்து பெண் எடுத்திருக்கிறோம். நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள். ஒரே கோயிலுக்குச் செல்வோம். நானும் ஜோதிமணி அக்காவும் உறவினர்தான். 20 வருடங்களாக அவரைத் தெரியும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன், சாப்பிட்டிருக்கிறேன். ஒரே கோயிலுக்குப் போகிறவர்கள்தான்.

தி.மு.க-வில் கொங்குப் பகுதியில் இருக்கின்ற எல்லோரும் ஏதோவொரு வகையில் உறவினர்தான். நானும், கரூர் அ.தி.மு.க விஜய பாஸ்கரும் பங்காளிகள். கோவையில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டவர்கள் பாதி பேர் எனது உறவினர்கள்தான். என்னுடைய குடும்பமா, என் ரத்த சொந்தமா என்றால் இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கும். ஆனால், கொங்குப் பகுதியில் எனக்கு தூரத்து உறவினருக்கோ, சொந்தக்காரருக்கோ ரெய்டு நடந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். என்னுடைய செல்வாக்கை இதில் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.” என்று தெரிவித்தார்.
மேலும், இதே செய்தியாளர்கள் சந்திப்பில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்தது தொடர்பாகப் பேசிய அண்ணாமலை, “இதன் நோக்கம் கல்வியின் தரத்தை உயர்த்துவது. மாநில அரசு இதை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் பிரச்னை கிடையாது. ஆனால், மத்திய அரசு இதை ஒரு காரணத்துக்காக கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் கல்வியின் தரத்தில் தமிழ்நாட்டை ஓவர்டேக் செய்யத் தொடங்கிவிட்டன. சுமாராகப் படிக்கும் மாணவர்களை அப்படியே வகுப்பில் உட்கார வைத்தால் எப்படி அவர்களை மேலே கொண்டுவருவது. அதற்காகத்தான் மத்திய அரசு இதைக் கொண்டுவந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்துவருகிறது.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
