உலகப் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (60) கடந்த 2018-ம் ஆண்டு தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் என்பவரை விவாகரத்து செய்தார். இதற்காக, அவர் கணிசமான பங்குகளை தனது முன்னாள் மனைவிக்கு கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி பிரபலம் லாரன்ஸ் சான்செஸ் (54) என்பவரை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த திருமணம் ஆஸ்பென் எனும் நகரில் நடைபெறவிருப்பதாகவும், அதற்கான திட்டமிடல், ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நியூயார்க் போஸ்ட் படி, ஜெஃப் பெசோஸ், லாரன் சான்செஸை ஆஸ்பென், கொலராடோவில் $600 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5096 கோடி) இந்த திருமணத்துக்கு செலவழிக்கப்படுகிறது. இந்த திருமணத்தில், பில் கேட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, ஜோர்டானின் ராணி ரானியா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம் திருமணத்தின் பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாட்டின் முழு விவரங்களை வெளியிட வேண்டாம் எனக் அறிவுறுத்தப்பட்டதாகக் தெரிகிறது. உலகம் முழுவதிலுமிருந்து மணமக்களுக்குப் பிடித்தமான விஷயங்களை திருமண நிகழ்வுக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளது என்று ஆஸ்பென் பிளானர் சாரா ரோஸ் அட்மேன் தனியார் செய்தி நிறுவனத்தின் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். திருமண தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/ParthibanKanavuAudioBook
