Modi: “நீண்ட ஆயுளுக்கும், நல்ல ஆரோக்கியத்துக்கும்..” – சோனியா காந்தியை வாழ்த்திய மோடி

மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியின் 78-வது பிறந்த நாள் இன்று (டிசம்பர் 9) கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து சோனியா காந்திக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உழைத்த உண்மையான சாம்பியன். துன்பங்களுக்கு மத்தியில் மிகுந்த கருணை, கண்ணியம் மற்றும் தைரியத்தோடு வாழ்பவர். சோனியா காந்தியின் பொது வாழ்வின் ஈடுபாட்டால், லட்சக்கணக்கானோர் அவரால் ஈர்க்கப்பட்டுள்ளனர். சோனியா காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சோனியா காந்தி – மோடி

பிரதமர் மோடி, “திருமதி சோனியா காந்தி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீண்ட ஆயுளுக்கும், நல்ல ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், “காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். வலிமையான சவால்களை வழிநடத்துவது முதல் கருணையுடன் அதை எதிர்கொள்வது வரை, அவரது பயணம் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. வெற்றியும் அமைதியும் நிறைந்த அவரின் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras