Ambedkar: `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ – நூலை வெளியிடும் த.வெ.க தலைவர் விஜய் | Live

விழா ஏற்பாடுகள்..!

புத்தக வெளியீட்டு விழா

இந்தியாவின் மகத்தான ஆளுமையான அம்பேத்கரின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’. விகடன் பிரசுரமும், Voice of Common நிறுவனமும் இணைந்து, வெளியிடும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, அம்பேத்கரின் நினைவு தினமான இன்று, சென்னையில் நடைபெறவிருக்கிறது.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீடு

இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதியரசர் கே.சந்துரு, அம்பேத்கரின் பேரனும், சமூகச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவும் இந்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்கள்.

ஏற்கெனவே இந்தப் புத்தகத்தின் முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அறிமுகச் சலுகையாக, ரூ. 999-க்கு புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.!