ஹிஜாப் கட்டுப்பாடு: ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆடைகளை கழற்றி மாணவி போராட்டம் – வெடித்த சர்ச்சை

ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக ஈரானிய பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஈரானிய பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது ஆடைகளை கழற்றி உள்ளாடைகளுடன் வலம் வந்து ஹிஜாப்புக்கு கட்டுப்பாடுகளுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார் . இச்சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படையினர் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் X-தளத்தில் வீடியோவாக வெளியாகி சர்ச்சையானதை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜோப், “காவல் நிலையத்தில், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதும், மனநல பாதிப்புடன் இருப்பதும் கண்டறியப்பட்டது” என்று கூறினார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரவியதுடன், விவாத்தையும், ஏற்படுத்தியுள்ளது. சிலர் அந்த பெண்ணின் செயல் வேண்டுமென்றே செய்த எதிர்ப்பு என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஒருவர், “பெரும்பாலான பெண்களுக்கு உள்ளாடையுடன் பொதுவில் இருப்பது அவர்களின் கெட்ட கனவுகளில் ஒன்றாகும். கட்டாய ஹிஜாப் மீது அதிகாரிகளின் பிடிவாதமான வற்புறுத்தலுக்கு இது ஒரு எதிர்வினை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் வெளியாகிய காட்சிகளில் சிறிது நேரம் கழித்து அடையாளம் தெரியாத நபர்களால் அந்த பெண் முழு நிர்வாணமாக வலுகட்டாயமாக காரில் அழைத்து செல்லப்படுகின்றார்.

இதனிடையே மாணவியின் ரத்தக் கறைகள் அந்த காரின் டயர்களில் காணப்பட்டதாகக் மாணவர் குழு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த மாணவியின் தற்போதைய நிலை குறித்த தெளிவான தகவல் எதுவும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும், அவர் எங்கே வைக்கப்பட்டுள்ளார் போன்ற எந்த தகவலும் இல்லை.

2022 ஆம் ஆண்டில், ஹிஜாப் விதிகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட ஈரானிய குர்திஷ் பெண் மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு ஈரானில் ஹிஜாப்க்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன என்பது குறிப்பிட்டதக்கது. !

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk