TVK Vijay : `விஜய், வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்காரு…’ – வாழ்த்திய ரஜினி

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த 27-ம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதே நேரம் அந்த அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் அந்தப் பேச்சை சினிமா வசனம் என்றெல்லாம் விமர்சித்தனர். இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து கூறினார். அதைத் தொடர்ந்து ரஜினி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

ரஜினி

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் விஜய் மாநாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், “அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகள். விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.” என்றார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி என பதில் அளித்து சென்றுவிட்டார்.