முத்துராமலிங்க தேவர் குருபூஜை: பசும்பொன்னில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், எடப்பாடி!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 62வது குருபூஜையினை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்திலுள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்டோபர் 30) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் 117 வது பிறந்த தினமும், 62 வது குருபூஜை விழாவும் கடந்த 28-ம் தேதி துவங்கியது. முதல் நாள் ஆன்மீக விழாவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவும் கொண்டாடப்பட்டது.

அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், சக்கரபாணி, கீதாஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அன்பில் மகேஷ், பெரியகருப்பன், டி.ஆர்.பி.ராஜா, நவாஸ்கனி எம்.பி, மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.

ம.தி.மு.க கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இன்று காலையில் மதுரை சென்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெப்பகுளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள தேவர் மாளிகைக்குச் சென்று குருபூஜையில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தமிழ்நாடு நிர்வாகி சசிக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88