Gold rate today: தங்கம் விலை பவுனுக்கு ரூ.59,000-த்தை தொட்டது!

இன்னும் இரண்டு தினங்களில் தீபாவளி வர உள்ள நிலையில், தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.59,000-த்தை தொட்டுள்ளது.

பண்டிகை காலம், முகூர்த்த தினங்கள் வர வர.. தங்கம் வாங்குவது இந்திய குடும்பங்களில் வழக்கம். ஆனால், சமீப காலமாக தங்கம் விற்கும் விலைக்கு இந்த வழக்கம் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.

தங்கம் விலை, இந்த அக்டோபர் மாதம் மட்டும் சுமார் ரூ.2,500-க்கும் மேல் ஏறியுள்ளது. இந்த மாதத்தின் முதலாம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,050 ஆகவும், பவுனுக்கு ரூ.56,400 ஆகவும் விற்பனை ஆனது. அது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து பவுனுக்கு ரூ.57,000, ரூ.58,000-த்தை தாண்டி இன்று தங்கம் விலை ரூ.59,000-த்தை தொட்டுள்ளது.

gold rate
Gold Rate: தங்கம் விலை ரூ.59,000!

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,315-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.58,520-க்கும் விற்பனை ஆனது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,375 ஆகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து ரூ.59,000 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.

சர்வதேச அளவில் நடந்துவரும் போர்கள், உலக நாடுகளில் நடக்கும் தேர்தல்கள், பொருளாதார மந்தநிலை தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb