பிரதமர் மோடி கடந்த செப்டம்பரில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் அந்த சமயத்தில் விவாததைக் கிளப்பியது. அப்போது, `நீதிபதிகள் தங்கள் மத அடையாளங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்தக்கூடாது. நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட செயல்கள் நீதி வழங்குவதில் குறுக்கிடக்கூடும் என்ற எண்ணத்தை மக்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தக்கூடாது.’ என்று பலதரப்பிலிருந்தும் வாதங்கள் வந்தன.
இவ்வாறிருக்க, தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “பிள்ளைகளின் திருமணம், பாண்டிகைகள் போன்ற நிகழ்வுகளின்போது மட்டுமே தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளின் இல்லங்களுக்குப் பிரதமர், முதல்வர்கள் செல்வார்கள். மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொள்வதைத் தவிர வேறு எந்த விஷயமும் விவாதிக்கப்படுவதில்லை.
அரசியல் நிர்வாகத் தலைவர்கள் மத்தியில் எந்தவொரு விவாதத்துக்கும் அப்பால் நீதித்துறை சார்ந்த விஷயங்களை ஒதுக்கிவைக்கும் அளவுக்கு நீதிபதிகளிடம் முதிர்ச்சியிருக்கிறது. நெறிமுறை மிகவும் கண்டிப்பானது. நீதித்துறை விவகாரங்கள் ஒருபோதும் அரசியல் நிர்வாகத் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை. ஜனநாயக ஆட்சியமைப்பில் எங்களின் கடமைகள் எங்களுக்குத் தெரியும். அதேபோல், அவர்களின் கடமைகள் அவர்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்திருக்கிறார்.
நவம்பர் 10-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிவியிலிருந்து சந்திரசூட் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY