Bose Venkat: “உன் கூடவுமா அரசியல் பண்ணனும்…” போஸ் வெங்கட் ட்வீட்.. த.வெ.க தொண்டர்கள் பதிலடி!

விக்கிரவாண்டியில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.

TVK விஜய்

த.வெ.க மாநாட்டிற்கு முந்தைய நாளான கடந்த சனிக்கிழமை கங்குவா பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட போஸ் வெங்கட், நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வாங்க என்று கூறியது பேசுபொருளானது. இயக்குநர் போஸ் வெங்கட் திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பதிவுக்கு த.வெ.க கட்சியினரும், விஜய் ரசிகர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.