தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா… பதறி வெளியேறிய ஊழியர்கள்; அமைச்சர் சொல்வதென்ன?

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக உள்ளிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதறிய வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையறிந்த அமைச்சர் எ.வ. வேலு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ. வேலு, “நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டடம் 1974-ல் கட்டப்பட்டது. தலைமைச் செயலகத்தின் முழு அலுவலகமும் இதில்தான் இருக்கிறது. முதல் தலத்தில் வேளாண்துறை இருக்கிறது. இங்கு திடீரென்று விரிசல் என்ற பீதி ஏற்பட்டதால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் கீழ்தளத்துக்கு வந்துவிட்டார்கள்.

கட்டடத்தின் தரைதளத்தில் போடப்பட்டிருக்கும் டைல்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டவை. அந்த காலத்தில் போடப்பட்ட டைல்ஸில் நாளடைவில் ஏர் கிராக் (Air Crack) ஏற்பட்டிருக்கிறது. அதைக் கட்டடத்தில் விரிசலோ என்ற அச்சத்தில் அலுவலகத்தின் வெளியேறினர். சம்பந்தப்பட்ட பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்திருக்கின்றனர். மேலும், கட்டடம் உறுதித்தன்மையுடன் இருக்கிறது. ஏர் கிராக் ஏற்பட்டிருக்கும் டைல்ஸ்களை மாற்றி புதிய டைல்ஸ் போட சொல்லப்பட்டிருக்கிறது. நாளை அந்தப் பணிகள் தொடங்கும். எனவே, அச்சப்பட வேண்டாம். பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்கள்” என்று விளக்கமளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88