“ஒரே பாடலில் பணக்காரர் ஆவது போல… துணை முதல்வர் ஆகிவிட்டார்” – விஜயபாஸ்கர் கிண்டல்

சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசும்போது, “தமிழகத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக தகவல் வருகிறது.

விஜயபாஸ்கர் – மா.சுப்ரமணியன்

திருச்சி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இதுதான் திருச்சி மக்களை சந்திக்கும் கடைசி சந்திப்பு, கோரிக்கைகளை மனுக்களாகவும், வாட்ஸ் அப்பிலும் அனுப்புமாறு கூறிவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களித்த மக்கள் சந்திக்க முடியவில்லை.

பாட்ஷா படத்தில் ஒரு பாடலில் பணக்காரர் ஆகிவிடுவது போல, எங்களைப்போல ஒருவர் எம்எல்ஏ-வாகி பிறகு அமைச்சராகி, துணை முதல்வரும் ஆகிவிட்டார்.

மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும், மாத்திரைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் என இந்த அரசு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாலும், மருத்துவமனையை தேடி வரும் நோயாளிகளிகளுக்கு முதலில் இந்த அரசு கவனத்தை செலுத்த வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் வேகமாக நடந்தால் போதாது. சுகாதாரத்துறையே வேகமாக நடக்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb