நவீன உலகில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில் ஈரோடு அருகே உறவினர்கள் ஒன்றுகூடி 100 வயதைக் கடந்த தங்களது தாத்தா, பாட்டிக்கு கனகாபிஷேகம் செய்து ஆசி பெற்றனர்.
ஈரோடு அருகே 46புதூர் ஊராட்சி பகுதிக்கு உள்பட்ட குதிரைப்பாளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், வீரம்மாள் தம்பதி. இவர்களுக்கு 4 பெண்கள், 2 மகன்கள் உள்ளனர். 100 வயதைக் கடந்த தாத்தா, பாட்டிக்கு கனக அபிஷேக விழா எடுக்க மகன்கள், மகள்கள், பேரன். பேத்திகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வாட்ஸ் ஆஃப் குழு தொடங்கி உறவினர்களை அதில் சேர்த்துள்ளனர்.
திட்டமிட்டபடி, பெருமாள், வீரம்மாள் தம்பதிக்கு ஈரோடு குதிரைப்பாளியில் உள்ள ஶ்ரீ மாகாளி அம்மன் கோயிலில் நூறாவது திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலில் கோயிலுக்கு வந்த தம்பதிக்கு மாலை மாற்றப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்து பட்டு உடைகள் அணிவிக்கப்பட்டு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் ஆயுள் விருத்தி ஹோமம் நடைபெற்று தனது சொந்தத்தினர் முன்னிலையில் மஞ்சள் கிழங்கு கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிற்றாலான தாலியை 110 வயதான பெருமாள் தனது மனைவி வீரம்மாளுக்கு கட்டினார். அப்போது உறவினர்கள் அனைவரும் மஞ்சளரிசி, பூக்களை தூவி வாழ்த்தினர்.தொடர்ந்து மூத்த தம்பதியினரிடம் அனைவரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுச்சென்றனர்.
இதுகுறித்து மகன்கள் கூறும்போது, “விவசாய வேலை செய்து எங்களை வளர்த்த தாய், தந்தைக்கு திருமணம் செய்து பார்ப்பது என்பது அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தந்தை பெருமாள் தற்போதும் சைக்கிளில் செல்வதும், சிறு வேலைக்கும் சென்று வருகிறார்.எள்ளு பேத்தி எடுத்தும் கூட தங்களது பெற்றோருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற எந்த பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். இன்னும் தங்களை சார்ந்து இருக்காமல் அவர்களாகவே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள் என்றனர். 100 வயதைக் கடந்த தம்பதிக்கு உறவினர்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சி எடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb