தெற்கு ரயில்வே சார்பில் மதுரையில் Track Machine பராமரிப்பு நிலையம்..!

மதுரை விளாங்குடியில் முதன்முதலாக இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரத்தை (Track Machine) சரிபார்க்க ஒரு பெரிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரங்களை பழுது நீக்கி பரமாரிக்க வசதிகள் உள்ளன.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் சுந்தர் கூறியதாவது, “தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என மொத்தம் ஆறு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையில் முதன்முதலாக இந்த இருப்புப் பாதை பராமரிப்பு கூடத்தை அரசு அமைத்துள்ளது. இது முக்கியமாக இடைநிலை மாற்றி அமைத்தலுக்காக (Intermidate Overhaul) கட்டப்பட்டுள்ளது .

Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்
Track Machine பராமரிப்பு நிலையம்

மதுரையில் கிட்டத்தட்ட 16 இருப்பு பாதை பராமரிப்பு இயந்திரங்கள் உள்ளன. அவற்றிற்கு ஏதாவது பிரச்சனை எனில் அவற்றை சரி செய்வதற்கு தேவையான கருவிகள், இயந்திரங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் கொண்ட இடமாக இது அமைக்கப்பட்டுள்ளது. பத்து கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் இந்த மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும்” என்று கூறினார்.