Navarasa: 9 பிரபல பாடகர்கள் பங்கேற்கும் ‘நவரசா’- லஷ்மன் ஸ்ருதியின் இசைக் கச்சேரி

அக்டோபர் 19ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் ‘லஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழு `நவரசா’ என்கிற தலைப்பில் 9 பாடகர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரி நடக்க இருக்கிறது.

இந்த இசை கச்சேரியில் பின்னணிப்பாடகி கலைமாமணி மாலதி லஷ்மண் பின்னணிப்பாடகர் முகேஷ், விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம் விஷால், பரத், ஸ்ரீநிஷா, மானசி, பேபி அக்‌ஷரா லஷ்மி, ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் பின்னணிப் பாடகி ரீமா ஆகியோர் பங்கேற்றுப் பாடும் ‘லஷ்மன் ஸ்ருதி’ யின் பிரம்மாண்டமான மெல்லிசை நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெற இருகிறது.

நவரசா

இசைக்கருவிகளின் முக்கியத்துவத்தையும் அருமை பெருமைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் இந்நிகழ்வு நூறு சதவீதம் இசைக்கலைஞர்கள் இசைக்க மேலே குறிப்பிட்டுள்ள பாடகர், பாடகிகள் பாட மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை bookmyshow.com, paytm insider.in ஆகிய இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட் மற்றும் விபரங்களுக்கு : +91 98842 19007 / + 91 91760 04547 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.